TNPSC Thervupettagam

சர்வதேசப் பேரிடர் குறைப்பு தினம் – 13 அக்டோபர்

October 14 , 2021 1049 days 432 0
  • இத்தினமானது 1989 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் அனுசரிக்கப்படுகிறது.
  • உலகளவில் இடர் குறித்த ஒரு விழிப்புணர்வு கலாச்சாரத்தினையும் பேரிடர் குறைப்பினையும் ஊக்குவிப்பதற்காக வேண்டி இத்தினமானது அனுசரிக்கப் படுகிறது.
  • உலகெங்கிலும் உள்ள மக்கள் மற்றும் சமூகங்கள் பேரழிவுகளுக்கு உட்படுவதிலிருந்து தம்மை எவ்வாறு காத்துக் கொள்கின்றன என்பதையும் அவர்கள் எதிர் கொள்ளும் இடர்களைச் சமாளிப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதையும் இத்தினம் போற்றுகிறது.
  • 2021 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “வளர்ந்து வரும் நாடுகளின் பேரிடர் அபாயம் மற்றும் பேரிடர் இழப்புகளைக் குறைப்பதற்கான சர்வதேச ஒத்துழைப்பு” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்