புதுதில்லியில் நடைபெறும் நான்கு நாள் சர்வதேசப் பொம்மை கண்காட்சியில் சுமார் 300க்கும் மேற்பட்ட உள்நாட்டு நிறுவனங்களும், சுமார் 100க்கும் மேற்பட்ட வெளிநாட்டு வாங்குபவர்களும் அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்தவர்களும் பங்கேற்கின்றனர்.
இந்த 15வது சர்வதேசப் பொம்மைகள் கண்காட்சி 2024 தெற்காசியாவின் மிகப்பெரிய கண்காட்சியாகும்.
நாட்டின் பொம்மை ஏற்றுமதி, முந்தைய நிதியாண்டில் 153.89 மில்லியன் டாலரில் இருந்து 2023-24ல் 152.34 மில்லியன் டாலராக குறைந்துள்ளது.
2022 ஆம் ஆண்டில், உலகளாவிய சந்தை சுமார் 60.3 பில்லியன் டாலர் மதிப்புள்ளப் பொம்மைகளை இறக்குமதி செய்தது.
இந்தச் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வரும், சீனா 48.3 பில்லியன் டாலர் மதிப்புள்ளப் பொம்மைகளை ஏற்றுமதி செய்து, உலக ஏற்றுமதியில் 80 சதவீத பங்கைக் கொண்டு உள்ளது.
உலகப் பொம்மை ஏற்றுமதிச் சந்தையில் இந்தியாவின் பங்கு என்பது சுமார் 0.3 சதவீதம் மட்டுமே ஆகும் என்பதோடு மேலும் இந்தியா ஏற்றுமதியில் 27வது இடத்தில் உள்ளது.
பொம்மை இறக்குமதியில் 60 மில்லியன் அமெரிக்க டாலர்களுடன் இந்தியா 61வது இடத்தில் உள்ளது.