சல்லகேர் - மனித விண்வெளி விமான உள்கட்டமைப்பு மையம்
January 7 , 2020 1786 days 738 0
கர்நாடகாவின் சித்திரதுர்கா மாவட்டத்தின் சல்லகேரில் மனித விண்வெளிப் பயண உள்கட்டமைப்பு மையத்தை அமைக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
இந்த மையமானது மூன்று ஆண்டுகளில் செயல்படும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.
இந்த மையமானது தேசிய நெடுஞ்சாலை – 4ல் (பெங்களூரு – புனே) அமைக்கப்பட உள்ளது.
தற்போது, இஸ்ரோவின் மனித விண்வெளிப் பயணத் திட்டமான ககன்யான் திட்டத்தில் கலந்து கொள்ளும் விண்வெளி வீரர்கள் ரஷ்யாவில் பயிற்சி பெறுகின்றனர்.
இந்த மையமானது ரஷ்யாவினால் வழங்கப்பட்ட அனைத்து வசதிகளையும் இந்தியாவிற்குள் கொண்டு வருவதையும் இந்தியாவிற்குள் விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
ககன்யான் திட்டத்தில் வெற்றி பெற்றால், அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்து மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பிய நான்காவது நாடாக இந்தியா உருவெடுக்க இருக்கின்றது.