சவக்கடலின் தரையில் சுமார் ஒரு மீட்டர் வரை உயரமுள்ள சில வெள்ளை நிற உப்புப் படிகக் கூடுகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்தப் படிகக் கூடுகள் ஆனது, தரைப் பரப்பிலிருந்து அதிக உவர் தன்மை கொண்ட ஒரு திரவம் வெளியேறுவதன் மூலம் உருவாகின்றன.
மிக அதிக உப்புத் தன்மை கொண்ட நிலத்தடி நீரானது ஏரியின் தரைப் பரப்பிலிருந்து வெளியேறும் போது தாதுக்களின் ஒரு தன்னிச்சையானப் படிகமயமாக்கலால் அவை உருவாகின்றன.
நடுக்கடல் முகடுகளிலும் மோனோ ஏரியின் துஃபா கோபுரங்களிலும் மிகவும் பெரும் பிரபலமான கருப்பு சல்பைடு படிகக் கூடுகள் காணப்படுகின்றன.