TNPSC Thervupettagam

சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமீரகம் – மதிப்புக் கூட்டப்பட்ட வரி

January 1 , 2018 2519 days 839 0
  • சவுதி அரேபியாவும், ஐக்கிய அரபு எமீரகமும் முதல் முறையாக மதிப்புக் கூட்டப்பட்ட வரியை (VAT-Value Added Tax) அறிமுகம் செய்திருக்கின்றன.
  • இது வருவாயை ஊக்குவிக்கும் விதத்தில் பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான ஐந்து சதவிகித வரியாகும்.
  • மருத்துவ சிகிச்சை, நிதிச்சேவைகள் மற்றும் பொதுப் போக்குவரத்து போன்ற சில சேவைகளுக்கு வரி விதிப்பிலிருந்து விலக்கு அல்லது பூஜ்ஜிய வரி மதிப்பீடு (zero-tax rating) அளிக்கப்பட்டுள்ளது.
  • வளைகுடா ஒத்துழைப்பு குழுவின் (Gulf Cooperation Council) மற்ற நாடுகளான பக்ரைன், குவைத்,  ஓமன் மற்றும் கத்தார் ஆகியவையும் இந்த வரியை அறிமுகம் செய்வதற்கு முடிவெடுத்துள்ளன.
  • இதில் முக்கியமான குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில் எந்தவொரு வளைகுடா நாடுகளும் எந்த விதமான தனிப்பட்ட வருமான வரியையும் விதிப்பதில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்