TNPSC Thervupettagam

சவுபாக்யா யோஜனா – உத்தரகாண்ட்

March 14 , 2018 2479 days 798 0
  • ஆற்றலுக்கான மத்திய இணை அமைச்சர்K. சிங் மற்றும் மாநில முதலமைச்சர்  திரிவேந்திர சிங் ராவத் உத்தரகாண்ட் மாநிலத்தின் டேராடூனில் சவுபாக்கியா  திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளனர்.
  • இத்திட்டத்தின் கீழ் உத்தரகாண்ட் மாநிலத்தில் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும்.
  • 2019-ல் அனைவருக்கும் மின் இணைப்பை வழங்க வேண்டும் என்ற இலக்கை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது.

சவுபாக்கியா  திட்டம்

  • நாட்டின் கடைக்கோடி வரை அனைத்து நகர்ப்புற மற்றம் கிராமப்புற வீடுகளுக்கும் மின் இணைப்பை வழங்குவதே சவுபாக்கியா திட்டத்தின் (பிரதம மந்திரி சஹாஜ் ஹிஜ்லி ஹர் கார் யோஜனா ) நோக்கமாகும்.
  • இத்திட்டத்தின் கீழ் மின் இணைப்பு சாதனங்களான மின்மாற்றிகள் (transformers), மீட்டர் கருவிகள், மின்கம்பிகள் (Wire) போன்றவற்றிற்கு மானியம் வழங்கப்படும்.
  • இதன் மூலம் அரசு 2019ல் அனைவருக்கும் 24×7 மின்சேவையை வழங்க இலக்கிட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்