இந்தியாவானது அணு ஆயுதத் திறன் கொண்ட சவுரியா ஏவுகணையின் புதிய பதிப்பை ஒடிசாவின் பாலசோரில் வெற்றிகரமாக சோதனை செய்தது.
புதிய பதிப்பு கொண்ட இந்தச் சவுரியா வகை ஏவுகணையானது செயல்படுத்த எளிதாகவும் தற்பொழுதுள்ள ஏவுகணைகளுடன் ஒப்பிடப்படும் பொழுது இலகுரகத் தன்மையுடையதாகவும் உள்ளது.
இது இரண்டு நிலை கொண்ட ராக்கெட் ஏவுகணையாகும். இது டிஆர்டிஓ-வினால் உருவாக்கப் பட்டுள்ளது.
இது மீயொளி வேகம் கொண்ட, நிலத்திலிருந்து நிலத்தில் உள்ள இலக்கைத் தாக்கி அழிக்கும் திறன் கொண்ட ஒரு ஏவுகணையாகும். இதன் வரம்பு 700-1000 கிலோ மீட்டராகும்.