இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாட்டின் முன்னணி மதகுரு (Cleric) பலகை விளையாட்டுகளுக்கு (Board Games) மதரீதியிலான தடையாணையை (religious edict) விதித்திருப்பினும் தற்போது முதன்முறையாக சவூதி அரேபியாவில் உலக சதுரங்க (Chess) சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்பட்டுள்ளது.
இச்சதுரங்க சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டிக்கு சவூதி மன்னர் சல்மான் உலக விரைவு மற்றும் அதிரடி சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டி (World Rapid and Blitz Chess Championship) என பெயர் சூட்டியுள்ளார்.
முறையே நார்வே, ஆர்மேனியா மற்றும் அஜர்பைஜானைச் சேர்ந்த உலகின் முதல் மூன்று முன்னணி சதுரங்க வீரர்களும் இப்போட்டியில் பங்கெடுத்துள்ளனர்.
நார்வே நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டரான மாக்னஸ் கார்ல்சன் தற்போது நடப்பு உலக செஸ் சாம்பியனாக உள்ளார்.