மிகப்பெரிய அளவில் உள்ள வாராக் கடன்களை சரி செய்வதற்காக ஒரு சொத்து மேலாண்மை நிறுவனத்தை (Asset management company -AMC) உருவாக்குவதாக சுனில் மேத்தா குழு அறிவித்துள்ளது.
இந்த AMCன் பெயர் இந்திய சஷாக்ட் சொத்து மேலாண்மை நிறுவனமாகும்.
பொதுத்துறை வங்கிகளில் பாதிக்கப்பட்ட சொத்துக்களின் மீதான விரைவான தீர்வுகள் குறித்த பணிகளுக்காக இந்த குழுவானது செயல்பட்டு வருகின்றது.
மும்பையில் நடைபெற்ற CII-CFO மாநாட்டில் பங்கேற்ற வங்கியாளர்கள் குழுவின் தலைவர் சுனில் மேத்தா இதனை அறிவித்தார்.
இந்த நிறுவனங்களானது வங்கியல் துறையில் உள்ள பாதிப்பை சமாளிக்க சஷாக்ட் திட்டத்தின் கீழ் 5 அம்ச உத்திகளைப் பின்பற்ற வேண்டும்.
இந்த திட்டத்தின் கீழ்
500 கோடிக்கு மேல் வாராக் கடன்களை (NPA - Non-Performing Assets) தீர்க்க AMC-யானது ஒரு மாற்று முதலீட்டு நிதியைக் (Alternate Investment Fund-AIF) கொண்டிருக்கும்.
இந்த AIF ஆனது தனியார் துறை வங்கிகள் உட்பட பல்வேறு சாத்தியமான முதலீட்டாளர்களை ஈடுபடுத்தி உருவாக்கப்பட இருக்கிறது.