நெல் சாகுபடி குறைவதைத் தடுக்கும் பொருட்டு, கர்நாடகாவின் சிவமொகாவில் உள்ள வேளாண் மற்றும் தோட்டக்கலை அறிவியல் பல்கலைக் கழகமானது (University of Agricultural and Horticultural Sciences - UAHS) ‘சஹ்யாத்ரி மேகா’ என்ற ஒரு புதிய சிவப்பு வகை நெல் வகையை உருவாக்கியுள்ளது.
இந்த வகையானது வெடிப்பு நோயை எதிர்க்கும் தன்மை உடையதாகவும் ஊட்டச் சத்துக்கள் நிறைந்ததாகவும் உள்ளது.
இந்தப் புதிய வகையானது மாநில அளவிலான துணை விதைக் குழுவினால் ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது. மேலும் இது வரும் காரீப் பருவத்திலிருந்து விவசாயிகளுக்கு கிடைக்கும்.
புதிய வகையை மேம்படுத்துவதற்கான மற்றொரு நோக்கம் நகர்ப்புறங்களில் உள்ள சுகாதார ஆர்வமுள்ள நுகர்வோரால் நுகரப்படும் நார் மற்றும் புரதம் நிறைந்த சிவப்பு அரிசியின் தேவையைப் பூர்த்தி செய்வதாகும்.