TNPSC Thervupettagam

சாகரோவ் பரிசு - பேராசிரியர் இல்ஹாம் டோடி

November 1 , 2019 1732 days 659 0
  • ஐரோப்பிய நாடாளுமன்றமானது "மனித உரிமைகளுக்கான சாகரோவ் பரிசை" உய்குர் அறிவாளரான இல்ஹாம் டோடிக்கு வழங்கியுள்ளது.
  • "பிரிவினைவாதத்திற்காக" நியாயமற்ற முறையில் சீனாவில் இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
  • பெய்ஜிங் பல்கலைக் கழகத்தில் வெளிப்படையாகப் பேசிய முன்னாள் பொருளாதார பேராசிரியருக்கு 2014 இல் தண்டனை வழங்கப்பட்டது.
  • ஐரோப்பிய நாடாளுமன்றத் தலைவரான டேவிட் சசோலி என்பவர் உடனடியாக இல்ஹாம் டோடியை விடுவிக்குமாறு சீனாவை வலியுறுத்தியதுடன், சீனாவில் சிறுபான்மையினர் உரிமைகளை (முஸ்லிம்கள்) மதிக்க வேண்டும் என்றும் சீனாவிற்கு அழைப்பு விடுத்தார்.
உய்குர்கள்
  • உய்குர்கள் பெரும்பாலும் சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் வாழும் ஒரு முஸ்லீம் இன சிறுபான்மையினர் ஆவர்.
  • அவர்கள் அங்குள்ள மக்கள்தொகையில் 45% என்ற அளவில் உள்ளனர்.
  • சீனாவின் தெற்கே உள்ள திபெத்தைப் போன்று சின்ஜியாங் அதிகாரப்பூர்வமாக சீனாவிற்குள் இருக்கும் ஒரு தன்னாட்சி பெற்ற பிராந்தியமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • அம்னஸ்டி இன்டர்நேஷனல் மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஆனது  ‘அதிகமான உய்குர்களை சிறையில் அடைத்தல்’ என்பது குறித்த ஒரு ஆவணம் சார்ந்த அறிக்கையை ஐ.நா குழுவிடம் சமர்ப்பித்துள்ளது.
  • ‘கைதிகள்’ எந்தக் குற்றச்சாட்டும் இன்றி காலவரையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக உலக உய்குர் காங்கிரஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்