TNPSC Thervupettagam

சாகர் - II திட்டம்

November 5 , 2020 1395 days 639 0
  • இந்தியப் போர்க் கப்பலான ஐராவதம் கப்பல் சாகர்-II திட்டத்தின் ஒரு பகுதியாக தெற்கு சூடானில் நுழைந்துள்ளது.
  • சாகர் திட்டத்தின் கீழ், இந்தியாவானது கோவிட் – 19 நோய்த் தொற்று மற்றும் இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்வதற்கு உதவுவதற்காக வேண்டி நட்பு ரீதியில் அயல் நாடுகளுக்கு பல உதவிகளைத் தற்பொழுது அளித்து வருகின்றது.
  • சாகர் – II திட்டத்தில், ஐஎன்எஸ் ஐராவதம் கப்பல் சூடான், டிஜிபோட்டி, தெற்கு சூடான் மற்றும் எரித்திரியா ஆகிய நாடுகளுக்கு உணவுப் பொருட்களை வழங்க இருக்கின்றது.
  • இந்தத் திட்டமானது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஆகிவற்றின் நெருங்கிய ஒத்துழைப்புடன் செயல்படுத்தப் படுகின்றது.
  • சாகர் திட்டத்தின் முதலாவது நிலையின் கீழ், இந்தியாவானது செசல்ஸ், மடகாஸ்கர், கோமரோஸ், மொரீஷியஸ், மாலத் தீவுகள் ஆகிய நாடுகளுக்கு உதவி செய்தது.
  • இந்த நிலையின் போது இந்தியா இலவச உணவு மற்றும் மருந்துகளை வழங்கியது.
  • இந்தத் திட்டத்தின் முதல் பகுதியில், ஐஎன்எஸ் கேசரி என்ற கப்பலானது பயன்படுத்தப் பட்டது.
  • சாகர் என்பது பிராந்தியத்தில் அனைவருக்குமான வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு (SAGAR- Security and Growth for All in the Region) என்பதைக் குறிக்கின்றது.
  • இது இந்தியப் பெருங்கடல் பகுதியின் உத்திசார் தொலைநோக்குப் பார்வையின் கீழ் 2015 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்