மேற்கு வங்கம் மற்றும் ஒடிஸா மாநில அரசுகள் இணைந்து “சாகர் கவாச்” எனும் கூட்டுப் பாதுகாப்பு பயிற்சியை மேற்கொண்டுள்ளன.
இரு மாநிலங்களின் 630 கி.மீ. நீளமுள்ள கடலோரப் பகுதிகளில், நடப்பில் மேற்கொள்ளப்படும் கடலோரப் பாதுகாப்பு முறைமையை (Mechanism) மேலும் வலுப்படுத்துவதற்காக இந்தக் கூட்டுப்பயிற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பல்வேறு பாதுகாப்புப் படைகளின் தயார்நிலை மற்றும் பாதுகாப்பு அளவுருக்களின் திறன் போன்றவற்றை சரிபார்க்க “சாகர் கவாச்” எனும் உண்மை நிலை ஒத்திகையாக கூட்டுப் பாதுகாப்பு பயிற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் இப்பயிற்சியில், கடலோர காவற் படைகளின் கண்காணிப்பு, ரோந்துப்பணிகளின் செயல் திறனை சோதனை செய்ய ஒடிஸா மற்றும் மேற்கு வங்கத்தில் சமவாய்ப்பற்ற முறையில் (Random) தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் “Red Force” எனப் பெயரிடப்பட்ட உருவகப்படுத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் ஏற்பாடு செய்யப்பட்டது.