TNPSC Thervupettagam
April 15 , 2024 77 days 265 0
  • 61வது தேசிய கடல்சார் தினத்தின் போது, கடல்சார் துறையில் ஆற்றப்பட்ட சீரியப் பங்களிப்புகளை அங்கீகரிப்பதற்காக சாகர் சம்மான் விருதுகள் வழங்கப்பட்டன.
  • இதில் விருது பெற்றவர்கள்
    • சாகர் சம்மான் வருணா விருது: ஸ்ரீ. திரேந்திர குமார் சன்யால்
    • சிறந்த பங்களிப்பிற்கான சாகர் சம்மான் விருது: கேப்டன் கமல் காந்த் செளத்ரி
    • துணிச்சல் மிகு பங்களிப்பிற்கான சாகர் சம்மான் விருது: கேப்டன் சுபிர்சாஹா, கேப்டன் O.M. தத்தா.
  • திறன் சார் கல்விப் படிப்புகளை வழங்கும் கடல் சாராப் பயிற்சி வழங்கீட்டு நிறுவனங்கள் பிரிவில்,
    • இந்துஸ்தான் கடல்சார் பயிற்சி நிறுவனம், டைடல் பார்க், திருவான்மியூர், சென்னை முதல் இடத்தைப் பிடித்தது.
    • இந்துஸ்தான் கடல்சார் பயிற்சி நிறுவனம், கீழ்ப்பாக்கம், சென்னை 2வது இடத்தினைப் பெற்றுள்ளது.
    • FOSMA கடல்சார் கல்வி நிறுவனம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள், கொல்கத்தா ஆனது 3வது இடத்தைப் பெற்றுள்ளது.
  • கடந்த 9 வருடங்களில் கடல்சார் பணியாளர்களின் எண்ணிக்கை 140% அதிகரித்து உள்ளது.
  • 2014 ஆம் ஆண்டில், பணியில் இருந்த இந்தியக் கடற்படையினரின் மொத்த எண்ணிக்கை 117,090 ஆக இருந்த நிலையில், இது 2023 ஆம் ஆண்டில் 280,000 ஆக இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்