கடல் சார் செயல்பாடுகளின் போது வேண்டிய பாதுகாப்பு தொடர்பான எச்சரிக்கைகள் மற்றும் ஆலோசனை அறிவுறுத்தல்களை கடலோரப் பகுதி மக்களுக்கு குறிப்பாக மீனவ சமுதாயத்திற்கு வழங்குவதற்காக மத்திய புவி அறிவியல் அமைச்சகம் ‘சாகர் வானி’ எனும் தொழிற்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
நாட்டின் முதல் ஒருங்கிணைக்கப்பட்ட தகவல் பரப்பும் அமைப்பான சாகர் வானி, மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் 11வது நிறுவன தினத்தன்று தொடங்கி வைக்கப்பட்டது.
கடல் சார் தகவல்களின் சேவைக்கான இந்திய தேசிய மையத்தால் இந்த மேம்பட்ட தகவல் பரப்பு அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மீன் பிடிப்பு வளமுள்ள மண்டலத்தின் (PEZ – Potential Fishing Zone) அறிவுறுத்தல்கள், பெருங்கடல் நிலை குறித்த முன்னறிவிப்புகள் (OSF – Ocean State Forecast) உயர் அலை எச்சரிக்கைகள், முன் கூட்டிய சுனாமி எச்சரிக்கை போன்றவை உள்ளடங்கிய பல்வேறு கடல் சார் பாதுகாப்பு தொடர்பான தகவல்கள் மற்றும் அறிவுறுத்தல் சேவைகளை சரியான காலத்தில் மின்னஞ்சல், கைபேசி செயலி, சமூக வலைதளம், அலைபேசி குறுஞ்செய்திகள், தொலைக்காட்சி, ரேடியோ, போன்ற பல தொழிற்நுட்ப தளங்களின் வழியே பிராந்திய மொழிகளில் மீனவர்களுக்கு அனுப்ப இந்த ஒருங்கிணைக்கப்பட்ட தகவல் பரப்பு அமைப்பான சாகர்வானி உதவும்.