TNPSC Thervupettagam

சாகி ஒரே சேவை மையத்தின் பங்கு பற்றிய தேசிய பயிற்சிப் பட்டறை

December 17 , 2017 2536 days 848 0
  • வன்முறைக்கான பலதரப்பட்ட தீர்வுகள் அளிப்பதை வலுப்படுத்துவதற்காக சாகி ஒரே சேவை மையத்தின் (One Stop Centres) பங்கு பற்றிய தேசிய பயிற்சிப் பட்டறை புது தில்லியில் நடத்தப்பட்டது.
  • பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகத்தின் சார்பாக நடத்தப்படும் இது அத்துறையின் அமைச்சர் மேனகா சஞ்சய் காந்தியால் துவங்கப்பட்டது.
  • இந்த பயிற்சிப் பட்டறையில் 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து தோராயமாக 400க்கும் மேற்பட்ட ஒரே சேவை மைய அலுவலர்களும் (One Stop Centres)  மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறையைச் சார்ந்த செயல்படுத்தும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
சாகி திட்டம்
  • இத்திட்டம் 2015ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதியிலிருந்து செயல்படுத்தப்படுகிறது.
  • இத்திட்டம் மருத்துவ வசதி, காவல் உதவி, சட்ட உதவி, வழக்கு மேலாண்மை, உளவியல் ரீதியான கலந்தாய்வுகள் மற்றும் தற்காலிக உதவி போன்ற ஒருங்கிணைந்த சேவைகளை வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் பெற்றிட உதவி செய்கிறது.
  • இத்திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் ஒரே சேவை மையங்களை படிப்படியாக அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்