TNPSC Thervupettagam
December 26 , 2022 574 days 415 0
  • முன்னாள் இந்திய ஆட்சிப் பணி அதிகாரி M. ராஜேந்திரன் எழுதிய வரலாற்று நாவலான காலா பாணி (கருப்பு நீர்) என்ற புத்தகமானது 2022 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதினை வென்றுள்ளது.
  • சிவகங்கையை ஆண்ட வேங்கை பெரிய உடையண்ண தேவர், காளையார்கோயில் போருக்குப் பிறகு ஆட்சி செய்த சின்ன மருதுவின் மகன் துரைசாமி ஆகியோர் உட்பட 72 பேர் தோல்வியடைந்து நாடு கடத்தப்பட்டதை இப்புத்தகம் சித்தரிக்கிறது.
  • ஆங்கிலேயர்களுக்கும் மருது சகோதரர்களுக்கும் இடையே நடைபெற்ற இந்தப் போரானது காளையார்கோயில் பகுதியில் உள்ள காடுகளில் 1801 ஆம் ஆண்டில் ஆறு மாதங்கள் வரை நடைபெற்றது.
  • இந்தப் போரில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு, மருது சகோதரர்கள் 1801 ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதியன்று தென் தமிழ்நாட்டில் அமைந்த திருப்பத்தூரில் தூக்கிலிடப் பட்டனர்.
  • கப்பலில் ஏற்றப்பட்ட 72 பேரின் நாடு கடத்தல் பயணமானது 1802 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 ஆம் தேதியன்று தொடங்கிய நிலையில், அவர்கள் 62 நாட்களுக்குப் பிறகு பினாங் பகுதியினை அடைந்தனர்.
  • பெரிய உதயண்ண தேவர் மற்றவர்களிடமிருந்துப் பிரிக்கப்பட்டு சுமத்ரா தீவிற்கு அனுப்பப் பட்டு அங்கு அவர் நான்கு மாதங்கள் மட்டுமே வாழ்ந்தார்.
  • 1820 ஆம் ஆண்டில் துரைசாமி உட்பட 11 பேர் இந்திய நாட்டிற்குத் திரும்பினார்கள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்