TNPSC Thervupettagam
December 24 , 2023 190 days 465 0
  • தமிழ் எழுத்தாளர் தேவிபாரதியின் நீர்வழி படூஉம் புதினம் 2023 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதை வென்றுள்ளது.
  • இது தமிழ்நாட்டின் கொங்கு மண்டலத்தில் உள்ள குடி நாவிதர் என்ற முடிதிருத்துநர் சமூகத்தினரின் வாழ்க்கையைச் சித்தரிக்கிறது.
  • நீர்வழி படூஉம் என்பது சங்க கால இலக்கியப் படைப்பான புறநானூறு கவிதையின் ஒரு வரியாகும்.
  • நீரின் பாதையில் பயணிக்கும் மிதவை என்று பொருள்படும் நீர்வழி படூஉம் “புனை போல் ஆறுயிர் முறைவழி படூஉம்” என்ற வரிகள், விதியால் கட்டமைக்கப்பட்ட ஒரு பாதையில் வாழ்க்கை பயணிக்கிறது என்பதைக் குறிக்கிறது.
  • தெலுங்கு எழுத்தாளர் T. பதஞ்சலி சாஸ்திரி மற்றும் மலையாள இலக்கியவாதி E.V. இராமகிருஷ்ணன் ஆகியோர் 2023 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் அடங்குவர்.
  • ஒன்பது கவிதைப் புத்தகங்கள், ஆறு புதினங்கள், ஐந்து சிறுகதைத் தொகுப்புகள், மூன்று கட்டுரைகள் மற்றும் ஒரு இலக்கிய ஆய்வு ஆகியவை இந்த ஆண்டு சாகித்ய அகாடமி விருதுகளைப் பெற்றுள்ளன.
  • 1954 ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம் தேதியன்று நிறுவப்பட்ட சாகித்ய அகாடமி, மத்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழான ஒரு தன்னாட்சி அமைப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்