பல்வேறு இந்திய மொழிகளைச் சேர்ந்த 21 எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களுக்கு 2024 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த விருதுகள் புதினங்கள், கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்கள் மற்றும் இலக்கிய விமர்சனம் போன்ற பல்வேறு பிரிவுகளில் சிறந்தப் படைப்புகளைக் கௌரவிக்கின்றன.
இந்தி மொழிக் கவிஞர் ககன் கில் மேன் ஜப் தக் ஆய் பஹார் என்ற தனது கவிதைப் புத்தகத்திற்காக இந்த விருதினைப் பெற்றுள்ளார்.
ஆங்கில மொழி எழுத்தாளர் ஈஸ்டரின் கிரே அவரது ஸ்பிரிட் நைட்ஸ் புதினத்திற்காக விருதினைப் பெற்றுள்ளார்.
வங்காள மொழி, டோக்ரி மற்றும் உருது ஆகிய மொழிகளுக்கான விருதுகள் இன்னும் அறிவிக்கப் படவில்லை.