மாகாஹி மொழி எழுத்தாளரான ஷேஷ் ஆனந் மதுகருக்கு சாகித்ய அகாடமியின் 2018ஆம் ஆண்டிற்கான பாஷா சம்மன் (Basha Samman) விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருதைப் பெறும் இரண்டாவது மாகாஹி மொழி எழுத்தாளர் இவரேயாவார்.
மாகாஹி மொழியின் “எக்லாவ்யா“ மற்றும் “மகாஹி புலாசல் ஹே“ போன்றவை இவரின் புகழ் பெற்ற படைப்புகளாகும்.
பாஷா சம்மன் விருது
நடப்பில் பொதுவாக சாகித்ய அகாடமி விருதானது இந்தியாவின் 24 பிராந்திய மொழிகளுக்கு வழங்கப்படுகின்றது.
ஆனால் பாஷா சம்மன் விருதானது சாகித்ய அகாடமியின் 24 மொழிகளுள் அல்லாது ஆனால் அவற்றிற்கு சமமாக நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் பேசப்படும் பிற மொழிகளுக்கு வழங்கப்படுகின்றது.
சமவகையில் தங்களுக்கும் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது என்பதை பிற மொழி எழுத்தாளர்களும் (அதாவது சாகித்ய அகாடமியின் 24 மொழி தவிர்த்த பிற கவிஞர்கள்) உணர்வதற்காக வேண்டி பாஷா சம்மன் விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.