TNPSC Thervupettagam

சாகோஸ் தீவுப் பகுதி ஒப்படைப்பு

October 9 , 2024 14 hrs 0 min 23 0
  • ஐக்கியப் பேரரசு ஆனது உத்தி சார் முக்கியத்துவம் வாய்ந்த சாகோஸ் தீவுகளின் இறையாண்மையை மொரீஷியஸுக்கு வழங்கியுள்ளது.
  • ஐக்கியப் பேரரசு ஆனது நீண்ட காலமாக சாகோஸ் தீவு மற்றும் அங்கு அமைந்துள்ள டியாகோ கார்சியா ராணுவ தளத்தை அமெரிக்காவுடன் இணைந்து கூட்டாக இயக்கி வருகிறது.
  • 58 தீவுகளை உள்ளடக்கிய சாகோஸ் தீவுப் பகுதியானது, இந்தியப் பெருங்கடலில் மாலத் தீவுகள் தீவுக்கூட்டத்திற்கு தெற்கே சுமார் 500 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
  • 1814 ஆம் ஆண்டில், பிரான்ஸ் நாட்டு அரசானது இந்தத் தீவுகளை ஆங்கிலேயர்களிடம் ஒப்படைத்தது.
  • 1965 ஆம் ஆண்டில், ஐக்கியப் பேரரசு ஆனது பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் பிரதேசத்தினை (BIOT) அமைத்தது என்ற நிலையில் அதில் சாகோஸ் தீவுகள் ஒரு மையப் பகுதியாக இருந்தன.
  • இதர பிற BIOT தீவுகள் பிரித்தானிய ஆட்சியிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பிறகு 1976 ஆம் ஆண்டில் செஷெல்சிடம் வழங்கப்பட்டன.
  • இந்தியப் பெருங்கடலில் உள்ள மற்றொரு பிரிட்டிஷ் காலனியான மொரீஷியஸுடன் நிர்வாக நோக்கங்களுக்காக சாகோஸ் இணைக்கப்பட்டது.
  • ஆனால் 1968 ஆம் ஆண்டில் மொரீஷியஸ் சுதந்திரம் பெற்ற போது, ​​சாகோஸ் தீவு பிரிட்டனுடனேயே இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்