இந்திய இரயில்வே சாக்ஷம் திட்டம் என்று பெயரிடப்பட்ட, நாட்டின் மிகப்பெரிய,வரையறுக்கப்பட்ட நேரத்திற்குள் கூடுதல் திறன்களை வளர்த்துக் கொள்ளும் பயிற்சியை அறிமுகப்படுத்த உள்ளது.
13 லட்சம் பணியாளர்கள் உடைய தன்னுடைய வலுவான தொழிலாளர் படையின் திறன்களை ஒன்பது மாத கால அளவுடைய ஒற்றை திறன் மேம்பாட்டு திட்டத்தின்மூலம் மேம்படுத்த ரயில்வே திட்டமிட்டுள்ளது.
அலுவலக உதவியாளர் முதல் ரயில்வே வாரிய உறுப்பினர்கள் வரை உள்ள அனைத்து பணியாளர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது..
மேலும் இந்திய இரயில்வே அதன் கூடுதல் செயலர் தரத்தில் உள்ள அதிகாரிகளை பிட்ஸ்பர்க்கில் உள்ள கார்னெகி மெல்லன் பல்கலைக்கழகத்தில் குறுகியகால படிப்பிற்கு அனுப்ப உள்ளது.