ஹாங்காங்கைச் சேர்ந்த மலையேறும் வீரரான சாங் இன் ஹங் என்பவர் எவரெஸ்ட் சிகரத்தை வெறும் 26 மணி நேரத்தில் ஏறி “உலகிலேயே எவரெஸ்ட் சிகரத்தில் மிக வேகமாக ஏறிய பெண்” எனும் சாதனையைப் படைத்துள்ளார்.
இவர் 8,848.86 மீட்டர் உயரம் கொண்ட இந்த சிகரத்தை தனது மூன்றாவது முயற்சியில் வெறும் 25 மணி 50 நிமிடங்களில் ஏறி சாதனை படைத்தார்.
இதற்கு முன்பாக 2017 ஆம் ஆண்டில் எவரெஸ்ட் மலை உச்சியில் ஏறிய முதல் ஹாங் காங் பெண்மணி எனும் சாதனையை இவர் படைத்தார்.
இதற்கு முன்பு எவரெஸ்ட் சிகரத்தில் 39 மணி 6 நிமிடங்களில் ஏறிய நேபாளத்தைச் சேர்ந்த புன்ச்சோ ஜங்மு லாமா என்பவரின் சாதனையை இவர் முறியடித்துள்ளார்.