நீதிபதிகள்K கோயல் மற்றும் யூ.யூ லலித் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வானது ஒவ்வொரு உயர்நீதிமன்றத்தின் அதிகார வரம்பின் கீழும் குறைந்த பட்சம் இரண்டு பாதிப்பிற்கு உள்ளாகக் கூடும் சாட்சியங்களின் பாதுகாப்பு மையத்தை மூன்று மாதங்களுக்குள் அமைக்க உத்தரவிட்டுள்ளது.
கற்பழிப்பு கொடுமைகளுக்குட்பட்டு உயிர்பிழைத்தவர்கள், பாலியல் துன்புறுத்துதலால் பாதிக்கப்பட்டவர்கள் போன்ற பல்வேறு குற்றவியல் வழக்குகளின் சாட்சியங்களுக்கு எத்தகு பயமும், அச்சுறுத்தலும் இல்லாத உகந்த சூழலில் வாக்குமூலம் அளிக்க உதவிபுரிவதே இந்த மையத்தின் முதன்மை நோக்கமாகும்.
சாட்சியங்களின் பாதுகாப்பு தொடர்பான சர்வதேச விதிமுறைகளுக்கு ஒருங்கமையும் வகையிலும், நீதிமன்றத்தில் சாட்சி கூறும் போது பாதிப்பிற்கு உள்ளாகக் கூடிய சாட்சியங்களின் பாதுகாக்கப்பட வேண்டிய உரிமைகளையும் நிலைநிறுத்தும் பொருட்டு இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது
தற்போது நடப்பில் , டெல்லியில் டெல்லி உயர்நீதி மன்றத்தினால் வரையறுக்கப்பட்ட நெறிமுறைகளின் வழிகாட்டலின் கீழ், நான்கு பாதிப்பிற்கு உள்ளாகக் கூடும் சாட்சியங்களின் பாதுகாப்பு மையங்கள் அமைந்துள்ளன.
டெல்லி நீதிமன்றமானது பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் குற்ற வழக்குகளின் சாட்சியங்கள் உள்ளடங்கிய வழக்குகளின் நீதி மீதான ஐ.நா வின் மாதிரி சட்டத்தின் (UN Model Law on Justice in Matters involving Child Victims and Witnesses of Crime) மூலம் ஊக்கமடைந்து இந்த நெறிமுறைகளை வழங்கியுள்ளது.