ஐக்கிய நாடுகள் சபையின் மேம்பாட்டுத் திட்டம் (UNDP) ஆனது, சாண்டியாகோ வலை அமைப்பில் இணைந்துள்ளது.
இது எளிதில் பாதிக்கப்படக்கூடிய நாடுகள் மற்றும் சமூகங்கள் காலநிலை மற்றும் பருவ நிலை மாற்றத்தினால் ஏற்படும் இழப்பு மற்றும் சேதத்தின் மீளமுடியாதப் பல தாக்கங்களை எதிர்கொள்ள உதவுவதற்காக வேண்டி அர்ப்பணிக்கப்பட்ட தொழில் நுட்ப நிபுணர்கள் மற்றும் அமைப்புகளை இணைக்கும் ஓர் உலகளாவிய முன்னெடுப்பு ஆகும்.
இதன் செயலகம் ஆனது, ஐக்கிய நாடுகள் சபையின் பேரிடர் அபாயக் குறைப்பு அலுவலகம் (UNDRR) மற்றும் ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் திட்டச் சேவைகளுக்கான அலுவலகம் (UNOPS) ஆகியவற்றால் இணைந்து நன்கு நிர்வாகிக்கப் படுகிறது.