TNPSC Thervupettagam
June 19 , 2018 2353 days 727 0
  • நாசாவின் சாதனைப் பெண்மணியான விண்வெளி வீராங்கனை பெக்கி விட்சன், தனது கடைசியான மற்றும் நீண்ட விண்வெளி பயணத்திலிருந்து திரும்பிய ஒரு வருடத்திற்குள்ளாக ஒரு விண்வெளி வீரராக தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
  • அவர் தனது பணியின் போது மொத்தம் 665 நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்து உலகம் முழுவதும் உள்ள பெண்களில் வேறு யாரும் புரியாத, வேறு எந்த நாசாவின் விண்வெளி வீரரும் புரியாத சாதனையைப் புரிந்துள்ளார்.

  • உலகின் மிக அதிக அனுபவசாலியான, விண்வெளியில் நடக்கும் பெண் வீரரான இவர் மொத்தம் 60 மணிநேரம் 21 நிமிடங்களை மொத்தம் 10 முறை விண்வெளி உடையணிந்து சாதனை அளவில் நடந்துள்ளார்.
  • சர்வதேச விண்வெளி நிலையத்தை இரு தடவை நிர்வகித்த முதல் பெண்மணி மற்றும் விண்வெளிக்குப் பறந்த வயதான பெண்மணி இவரேயாவார்.
  • 2009-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரையில் எப்பொழுதும் ஆண்களால் தலைமை தாங்கப்படும் நாசாவின் விண்வெளிப் படைக்கு தலைமை தாங்கிய முதல் மற்றும் ஒரே பெண்மணி (மேலும் முதல் ராணுவம் சாராத நபர்) இவரேயாவார்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்