சாதி அடிப்படையிலான பாகுபாட்டினைத் தடை செய்வதற்கான ஒரு சட்டத்தினைக் கொண்டு வந்த அமெரிக்காவின் முதல் நகரமாக சியாட்டில் மாறியுள்ளது.
"பணியமர்த்தல், பதவிக்காலம், பதவி உயர்வு, பணியிட விதிமுறைகள் அல்லது ஊதியம் ஆகியவற்றில் சாதியின் அடிப்படையில் வணிக நிறுவனங்கள் பாகுபாடு காட்டுவதை" இது தடை செய்கிறது.
தெற்காசியாவிலிருந்து 1,67,000க்கும் மேற்பட்ட மக்கள் வாஷிங்டன் மாகாணத்தில் வாழ்வதோடு, இவர்களில் பெரும்பாலோர் கிரேட்டர் சியாட்டில் நகரில் உள்ளனர்.
2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், பாஸ்டன் நகருக்கு அருகிலுள்ள பிராண்டீஸ் பல்கலைக் கழகமானது தனது பாகுபாடற்றக் கொள்கையில் சாதியை உள்ளடக்கிய முதல் அமெரிக்கக் கல்லூரி ஆக மாறியது.