TNPSC Thervupettagam

சாதியைக் குறிப்பிடுவதற்குத் தடை - FIR

March 28 , 2019 1943 days 544 0
  • பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில உயர் நீதிமன்றமானது முதல் தகவல் அறிக்கையில் சாதியைக் குறிப்பிடுவதற்கு தடை விதித்துள்ளது.
  • பழமையான பஞ்சாப் காவல் துறை விதிகள் 1934 ஆனது முதல் தகவல் அறிக்கையில் புகார் அளிப்பவர் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர் ஆகிய இருவரின் சாதிகளைக் குறிப்பிட வேண்டும் என்று கூறுகிறது.
  • இந்த அமர்வானது கண்ணியத்துடன் நடத்தப்படுவதற்கான உரிமை என்பது அடிப்படை மற்றும் அடிப்படை மனித உரிமை என்று குறிப்பிட்டுள்ளது.
  • மேலும் இந்த அமர்வானது பிறப்பின் அடிப்படையில் சமுதாயத்தை பிரிவுகளாக பிரிக்கக் கூடாது என்றும் அனைவரும் சமம் என்றும் கூறியுள்ளது.
  • கொலை வழக்கு விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்டவர், சாட்சியங்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் சாதிகளை ஹரியானா காவல்துறை வெளியிட்டதால், அம்மாநில உயர் நீதிமன்றம் இந்த வகையான ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்