TNPSC Thervupettagam

சாந்தி ஸ்வரூப் பட்நாகர் பரிசுகள்

March 1 , 2019 1978 days 732 0
  • பிரதம மந்திரி 2016, 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டிற்கான சாந்தி ஸ்வரூப் பட்நாகர் பரிசுகளை விருது பெறுபவர்களுக்கு வழங்கினார்.
  • இது ஒவ்வொரு வருடமும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பல்வேறு பிரிவுகளில் திறமையான இந்தியப் படைப்புகளுக்கு அங்கீகாரமளிப்பதற்காக வழங்கிடப்படுகின்றது.
  • 2016 ஆம் ஆண்டிற்காக 11 அறிவியலாளர்கள் விருது வழங்கப்பட்டனர். அவர்களில் பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தின் டாக்டர் ரிஷிகேஷ் நாராயண் மற்றும் மும்பையில் உள்ள டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தின் டாக்டர் அமலேந்து கிருஷ்ணா ஆகியோர் அடங்குவர்.
  • 2017 ஆம் ஆண்டிற்காக 10 அறிவியலாளர்கள் விருது வழங்கப்பட்டனர். இவர்களில் டெல்லி ஜவகர்லால் நேரு தேசியப் பல்கலைக்கழகத்தின் டாக்டர் தீபக் கவுர் மற்றும் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் டாக்டர் S. சுரேஷ்பாபு ஆகியோரும் உள்ளடங்குவர்.
  • 2018 ஆம் ஆண்டிற்காக 13 அறிவியலாளர்கள் விருது வழங்கப்பட்டனர். இவர்களில் டெல்லி இந்திய அறிவியல் நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர் அமித்குமார் மற்றும் கான்பூர் இந்திய அறிவியல் நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர் நிதின் சக்சேனா ஆகியோரும் அடங்குவர்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான சாந்தி ஸ்வரூப் பட்நாகர் பரிசு
  • இந்தியாவில் வருடந்தோறும் அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்றத்தால் கொடுக்கப்படும் ஒரு அறிவியல் விருது இதுவாகும்.
  • இந்த விருது அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மையத்தின் நிறுவன இயக்குநர் சாந்தி ஸ்வரூப் பட்நாகரால் இப்பெயர் வழங்கப் பட்டுள்ளது.
  • இது 1958 ஆம் ஆண்டில் முதலில் வழங்கப்பட்டது.
  • தனது 45 வயது வரையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் ஏதேனும் ஒரு பிரிவில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் இந்தியாவின் எந்தக் குடிமகனும் இந்த விருது பெற தகுதியுடையவர்களாவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்