TNPSC Thervupettagam

சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது

September 27 , 2017 2616 days 1076 0
  • CSIR எனும் மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலால் ஆண்டுதோறும் உயிரியல், வேதியியல், சுற்றுச்சூழல், அறிவியல், கணிதம், மருத்துவம், இயற்பியல் போன்றவற்றில் மேற்கொள்ளப்படும் பயன்பாட்டு அல்லது அடிப்படை ஆராய்ச்சியில் குறிப்பிடத்தக்க, சிறந்த பங்களிப்பினை அளிப்பவர்களுக்கு சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது  வழங்கப்படும்.
  • இந்தியாவில் அறிவியலின் பல்துறைகளில் வழங்கப்படும் மிக உயரிய விருதாகும்.
  • மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் குழுவின் நிறுவனரான சாந்தி ஸ்வரூப் பட்நாகரின் பெயரில் இவ்விருது வழங்கப்படுகிறது.
  • 1958-ல் இவ்விருது முதன்முதலில் வழங்கப்பட்டது.
2017 ஆம் ஆண்டின் விருது பெற்றவர்கள் உயிரியல் துறை
  • தீபக் நாயர், (மண்டல உயிர்த் தொழில்நுட்ப மையம்,பரிதாபாத்)
  • சஞ்சீவ தாஸ் (தேசிய நோய் எதிர்ப்பியல் மையம்- டெல்லி)
வேதியியல் துறை
  • நரேஷ் பட்வாரி (இந்திய தொழில்நுட்பக் கழகம் -மும்பை )
புவி அறிவியல்
  • சுரேஷ் பிரபு (விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையம் திருவனந்தபுரம்)
பொறியியல் துறை
  • அலோக் பால் (இந்திய தொழில்நுட்பக் கழகம்,பெங்களூரு)
  • நீலேஸ் மேத்தா (இந்திய அறிவியல் ஆய்வுக் கழகம், பெங்களூரு)
மருத்துவத் துறை
  • அமித்பட் (டாட்டா நினைவியல் மையம் , மும்பை)
  • தீபக் கௌர் (ஜே.என்.யூ , டெல்லி)
இயற்பியல் துறை
  • நிசிம் கானோகர், (டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் , புனே)
  • வினய் குப்தா (தேசிய இயற்பியல் ஆய்வகம், டெல்லி)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்