TNPSC Thervupettagam

சாந்தி ஸ்வரூப் பட்னாகர் விருதுகள் 2019

September 27 , 2019 1767 days 585 0
  • சாந்தி ஸ்வரூப் பட்னாகர் விருதுகளை இந்தியக் குடியரசுத் தலைவர்  அறிவித்துள்ளார்.
  • இந்த விருதுகள் இந்தியாவின் மிக உயர்ந்த பன்முக அறிவியல் விருதுகளாகும்.
  • இது ஒரு வருடாந்திர விருதாகும்.
  • இந்த விருதுகள் அறிவியல்சார் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி  மன்றத்தினால் (Council of Scientific and Industrial Research - CSIR) வழங்கப் படுகின்றன.
  • இந்த விருதைப் பெறுபவர்களின் பெயர்கள் வழக்கமாக CSIRன் நிறுவன தினமான செப்டம்பர் 26 அன்று அதன் தலைமை இயக்குநரால் அறிவிக்கப் படுகின்றன.
  • இந்த விருது ஏழு பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றது. அந்தப் பிரிவுகளாவன
    • இயற்பியல் அறிவியல்
    • வேதியியல் அறிவியல்
    • உயிரியல் அறிவியல்
    • மருத்துவ அறிவியல்
    • கணித அறிவியல்
    • பொறியியல் அறிவியல்
    • பூமி, வளிமண்டலம், பெருங்கடல் மற்றும் கிரக அறிவியல்.
  • CSIRன் முதலாவது தலைமை இயக்குநரும் பல்கலைக்கழக மானியக் குழுவின் முதலாவது தலைவருமான சாந்தி ஸ்வரூப் பட்னாகரின் (1894 - 1955) நினைவாக இந்த விருது வழங்கப்படுகின்றது.
  • இவருக்கு 1954 ஆம் ஆண்டில் பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்