- சமீபத்தில் 2018 ஆம் ஆண்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைக்கான சாந்தி ஸ்வரூப் பட்னாகர் பரிசை அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்றம் (CSIR - Council of Scientific and Industrial Research) அறிவித்துள்ளது.
- ஒவ்வொரு ஆண்டும் நாட்டில் உள்ள பல்வேறு நிறுவனங்களைச் சார்ந்த 45 வயதுக்குட்பட்ட விஞ்ஞானிகளுக்கு இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன. கடந்த 5 ஆண்டுகளில் அறிவியல் துறையில் சிறப்பாகப் பணியாற்றிய விஞ்ஞானிகளுக்கு இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன.
உயிரியல் அறிவியல்
- டாக்டர் தாமஸ் புக்கடயில் - இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் , புனே.
- கணேஷ் நாகராஜ் - இந்திய அறிவியல் நிறுவனம் , பெங்களுரு.
வேதியியல் அறிவியல்
- ராகுல் பானர்ஜி - இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கொல்கத்தா.
- சுவாதின் குமார் மண்டல் - இந்திய அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கொல்கத்தா.
புவி, வளிமண்டலம், கடல் மற்றும் கிரக அறிவியல்
- டாக்டர் மதினேனி வெங்கட் ரத்னம் - தேசிய வளிமண்டல ஆராய்ச்சி ஆய்வகம் , திருப்பதி.
- பார்த்தசாரதி சக்கரவர்த்தி - அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்றம், தேசிய கடலியல் நிறுவனம் , கோவா.
பொறியியல் அறிவியல்
- அமீத் குமார் - இந்திய தொழில்நுட்ப நிறுவனம் , பம்பாய்
- அஸ்வின் அனில் குமாஸ்தே - இந்திய தொழில்நுட்ப நிறுவனம் , பம்பாய்
கணித அறிவியல்
- அமீத் குமார் - இந்திய தொழில்நுட்ப நிறுவனம் , தில்லி
- நிதின் சக்சேனா - இந்திய தொழில்நுட்ப நிறுவனம் , கான்பூர்
மருத்துவ அறிவியல்
- டாக்டர் கணேசன் வெங்கட சுப்பிரமணியன் – மனநிலை சார்ந்த இந்திய ஆரோக்கியம் மற்றும் நரம்பியல் நிறுவனம், பெங்களுரு.
இயற்பியல் அறிவியல்
- டாக்டர் அதீதி சென் டி - ஹரிஷ் சந்திரா ஆராய்ச்சி நிறுவனம், அலகாபாத்
- டாக்டர் அம்பாரிஷ் கோஷ், இந்திய அறிவியல் நிறுவனம், பெங்களுரு