TNPSC Thervupettagam

சான்யே-6 – நிலவு மாதிரி தரவு

November 21 , 2024 4 days 52 0
  • நிலவின் தொலைதூரப் பகுதியிலிருந்து சீன ஆய்வுக்கலம் கொண்டு வந்த நிலவு மண் மற்றும் பாறை மாதிரிகளின் முதல் விரிவான பகுப்பாய்வுகளை அறிவியலாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
  • இந்த மாதிரியில் உள்ள எரிமலைப் பாறையானது சுமார் 2.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையது.
  • ஆளில்லா ஆய்வுக் கலத்தின் தரையிறங்கும் தளம் ஆனது அந்த காலக் கட்டத்தில் எரிமலை வெடிப்புகள் அவ்வப் போது ஏற்பட்ட பகுதியாக இருந்ததைக் குறிக்கிறது.
  • நிலவின் தொலை தூரப் பகுதியில் உள்ள பசால்ட் பாறையின் வயது 3 பில்லியன் ஆண்டுகளுக்கும் மேலானது.
  • 2020 ஆம் ஆண்டில் சீனாவின் சான்யே-5 (சாங்’கே) என்ற நிலவு ஆய்வுக் கலத்தினால் சேகரிக்கப் பட்ட அண்மைத் தொலைவு பக்கப் பகுதியின் மண் மாதிரிகள் 2 பில்லியன் ஆண்டுகள் பழமையானவை எனக் கண்டறியப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்