TNPSC Thervupettagam

சாபஹார் துறைமுகம் வழியாக ஆப்கனுக்கு கோதுமை கப்பலை அனுப்பி வைத்தது இந்தியா

October 30 , 2017 2584 days 859 0
  • 1 மில்லியன் டன் எடையுடைய கோதுமையை ஈரானின் சாபஹார் துறைமுகம் வழியாக ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா அனுப்பி வைத்துள்ளது.
  • சர்வதேச போக்குவரத்து மற்றும் பரிமாற்று வழித்தடத்தை ஏற்படுத்துவதற்கான முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, ஆப்கானிஸ்தானுக்கு சாபஹார் துறைமுகம் வழியாக புதிய வழித்தடத்தில் அனுப்பப்படும் முதல் சரக்கு இதுவேயாகும்.
  • இந்த சரக்குக் கப்பலை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் ஆப்கன் வெளியுறவுத்துறை அமைச்சர் சலாஹீதீன் ரப்பானி ஆகியோர் காணொலிக் காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
  • 2003ல் பாகிஸ்தான், ஆப்கனை அடைவதற்கு தனது நிலப்பகுதியை பயன்படுத்தக்கூடாது என தடை விதித்ததால் இந்தியா ஈரானின் பந்தர் அப்பாஸ் துறைமுகம் வழியாக சரக்குகளை அனுப்பியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்