TNPSC Thervupettagam

சாபஹார் துறைமுகம்

December 4 , 2017 2547 days 977 0
  • “ஷாஹித் பேஹெஸ்தி துறைமுகம் “என்றழைக்கப்படும் சாபஹார் துறைமுக திட்டத்தின் முதல் கட்டம் அண்மையில் தொடங்கி வைக்கப்பட்டது.
  • 2016-ஆம் ஆண்டின் இந்திய-ஈரானிய-ஆப்கானிய முத்தரப்பு ஒப்பந்தத்தின் கீழ் பாகிஸ்தான் வழியேயான போக்குவரத்தைப் புறக்கணித்து இது இம்மூன்று நாடுகளிடையே புதிய புவியிட முக்கியத்துவம் வாய்ந்த போக்குவரத்து வழிப்பாதையை அளித்துள்ளது.
  • பெர்ஷிய வளைகுடாவின் வெளிப்புறத்தில் இத்துறைமுகம் அமைந்துள்ளதால் இந்தியாவின் மேற்கு கடற்கரையிலிருந்து இத்துறைமுகத்தை எளிதில் அணுகலாம்.
  • மேலும் சாபஹார் துறைமுகத்தை ஈரானின் பிற இரயில்வே நெட்வோர்க்குகளுடன் இணைப்பதற்காக சாபஹார் துறைமுகம் மற்றும் ஜஹேடான் இடையே இந்தியா புதிய இரயில் பாதைகளை அமைத்து வருகிறது.
  • இது ஆப்கானிஸ்தானில் இந்தியா கட்டமைத்துவரும் டேலாரம் – ஜாரஞ் சாலையுடன் மேலும் இணைக்கப்படும். இது ஜஹேடான் வழியாக இரயில் மூலமாக ஆப்கன்-ஈரான் எல்லையில் இணையும்.
  • இந்தியா மற்றும் ரஷியாவை இணைக்கும் வகையில் இத்துறைமுகத்தை ஜஹேடான் இரயில்வே நெட்வோர்க்கின் மூலம் சர்வதேச வட-தென் போக்குவரத்து வழிப்பாதையுடனும் (International North-South Transit Corridor) இணைத்திட இயலும்.
  • ஒரு மாதத்திற்கு முன் சாபஹார் துறைமுகத்தின் மூலமாக கடல் வழியாக இந்தியா தனது முதல் கோதுமை சரக்கை ஆப்கானிற்கு அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்