“ஷாஹித் பேஹெஸ்தி துறைமுகம் “என்றழைக்கப்படும் சாபஹார் துறைமுக திட்டத்தின் முதல் கட்டம் அண்மையில் தொடங்கி வைக்கப்பட்டது.
2016-ஆம் ஆண்டின் இந்திய-ஈரானிய-ஆப்கானிய முத்தரப்பு ஒப்பந்தத்தின் கீழ் பாகிஸ்தான் வழியேயான போக்குவரத்தைப் புறக்கணித்து இது இம்மூன்று நாடுகளிடையே புதிய புவியிட முக்கியத்துவம் வாய்ந்த போக்குவரத்து வழிப்பாதையை அளித்துள்ளது.
பெர்ஷிய வளைகுடாவின் வெளிப்புறத்தில் இத்துறைமுகம் அமைந்துள்ளதால் இந்தியாவின் மேற்கு கடற்கரையிலிருந்து இத்துறைமுகத்தை எளிதில் அணுகலாம்.
மேலும் சாபஹார் துறைமுகத்தை ஈரானின் பிற இரயில்வே நெட்வோர்க்குகளுடன் இணைப்பதற்காக சாபஹார் துறைமுகம் மற்றும் ஜஹேடான் இடையே இந்தியா புதிய இரயில் பாதைகளை அமைத்து வருகிறது.
இது ஆப்கானிஸ்தானில் இந்தியா கட்டமைத்துவரும் டேலாரம் – ஜாரஞ் சாலையுடன் மேலும் இணைக்கப்படும். இது ஜஹேடான் வழியாக இரயில் மூலமாக ஆப்கன்-ஈரான் எல்லையில் இணையும்.
இந்தியா மற்றும் ரஷியாவை இணைக்கும் வகையில் இத்துறைமுகத்தை ஜஹேடான் இரயில்வே நெட்வோர்க்கின் மூலம் சர்வதேச வட-தென் போக்குவரத்து வழிப்பாதையுடனும் (International North-South Transit Corridor) இணைத்திட இயலும்.
ஒரு மாதத்திற்கு முன் சாபஹார் துறைமுகத்தின் மூலமாக கடல் வழியாக இந்தியா தனது முதல் கோதுமை சரக்கை ஆப்கானிற்கு அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.