பாக்கமலை மற்றும் கங்காவரம் மலைகளில் கணிசமான எண்ணிக்கையில் காணப் படும் சாம்பல் நிற அணிலின் கணக்கெடுப்பினை நடத்த விழுப்புரம் வனப் பிரிவு திட்டமிட்டுள்ளது.
இந்த சாம்பல் நிற இராட்சத அணில் ஆனது, பொதுவாக தென்னிந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில், கேரள மாநிலத்தின் சின்னார் வனவிலங்குச் சரணாலயம் முதல் தமிழ்நாட்டின் ஆனைமலைப் புலிகள் சரணாலயம் மற்றும் பழனி மலைக் குன்றுகள் வரையிலான பகுதிகளில் கூடு கட்டும் என்று அறியப் படுகிறது.
இந்த இனம் ஆனது செந்நிறப் பட்டியலில் அச்சுறுத்தலுக்கு உள்ளான இனமாக வகைப் படுத்தப் பட்டுள்ளது மற்றும் CITES உடன்படிக்கையின் இரண்டாவது பின்னிணைப்புப் பட்டியலின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது.
இந்த அணில் இனமானது 1972 ஆம் ஆண்டு வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் Iவது பட்டியலின் கீழ் அருகி வரும் உயிரினமாகப் பட்டியலிடப் பட்டுள்ளது.