சாம்பியன்ஸ் படகுப் போட்டி: பாம்புப் படகுப் பந்தயம் - கேரளா
September 1 , 2019 1915 days 674 0
ஆலப்புழாவில் புன்னமடா ஏரியில் நடைபெற்ற பெருமைமிகு நேரு டிராபியின் 67வது பதிப்பை பல்லதுருத்தி படகு மன்றத்தின் பாம்புப் படகான நடுபாகம் சுந்தன் வென்றது.
சம்பக்குளம் சுந்தன் மற்றும் கரிச்சல் சுந்தன் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்தன.
1952ம் ஆண்டில் இந்தியாவின் முதல் பிரதமர் ஆலப்புழைக்கு வருகை தந்து நடுபாகம் சுந்தன் (பாம்புப் படகு) படகில் பயணித்தார்.
இதுபற்றி
இந்தப் பந்தயம் கேரளாவில் மிகப்பெரிய அளவில் இங்கொன்றும் அங்கொன்றுமாக பரவி இருக்கும் பாம்புப் படகுப் பந்தயங்களை தொழில்நுட்பப் படுத்துவதிலும், அவர்களின் பாரம்பரிய தன்மையை அழிக்காமல் அவற்றை வர்த்தகப் படுத்துவதிலும் கவனத்தைச் செலுத்துகின்றது.
கேரளாவின் சுற்றுலாத் துறையால் நடத்தப்படும் இப்பந்தயம் ஐபிஎல் பந்தயத்தின் மாதிரியில் நாட்டில் நடத்தப்படும் முதலாவது படகுப் பந்தயமாகும்.
இப்போட்டியில் மொத்தம் 12 பந்தயங்கள் இருக்கும்.
இது நேரு டிராபியுடன் துவங்கி நவம்பர் 23 தேதியன்று கொல்லத்தில் குடியரசுத் தலைவர் படகுப் பந்தயக் கோப்பையுடன் முடிவடைகின்றது.