சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியம் ஆனது (IUCN) இந்த இனங்களை (சாய்கா டாடாரிகா) மிகவும் அருகிய நிலையில் உள்ள இனம் என்ற வகையிலிருந்து அச்சுறுத்தல் நிலையை அண்மித்த இனம் ஆக மாற்றப்பட்டது.
சாய்கா என்ற இனத்தில் பெரும்பாலான பகுதிகளில் காணப்படும் சைகா டாடாரிகா டாடாரிகா மற்றும் மங்கோலியாவில் மட்டுமே காணப்படும் சைகா டாடாரிகா மங்கோலிகா என இரண்டு துணை இனங்கள் உள்ளன.
ஐரோப்பாவில் ஹங்கேரி முதல் ஆசியாவின் மஞ்சூரியா வரை பரந்து விரிந்து கிடக்கும் பெரியப் புல்வெளிப் பகுதியான ஐரோப்பிய ஆசிய ஸ்டெப்பி புல்வெளி முழுவதும் ஒரு காலத்தில் இந்த இனம் காணப்பட்டது.
கஜகஸ்தானில் 2005 ஆம் ஆண்டில் வெறும் 48,000 ஆக இருந்த சாய்கா இனங்களின் எண்ணிக்கையானது தற்போது 1.9 மில்லியனுக்கும் மேலாக அதிகரித்துள்ளது.
2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதக் கணக்கெடுப்பின்படி, மங்கோலியன் கிளை இனங்களில் 15,540 உயிரிகள் உள்ளன.