இந்தியக் கடலோரக் காவற்படையும், ஜப்பானியக் கடலோரக் காவற்படையும் சென்னைக் கடற்கரையருகில் வங்காள விரிகுடாவில் சாரெக்ஸ் – 18 (Sarex-18) என்ற கூட்டு தேடுதல் மற்றும் மீட்புப் பயிற்சி நடவடிக்கையை மேற்கொண்டன.
இந்தப் பயிற்சி நடவடிக்கையின் போது இந்திய மற்றும் ஜப்பானியக் கடலோரக் காவற்படைகள் போர்க்கப்பல் ஒன்றை கடத்துவது போலவும், அதில் பயணிக்கும் பயணிகளை மீட்பது போலவும் மற்ற இதர மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது போலவும் இந்நிகழ்ச்சியை உருவகப்படுத்தின.
இந்தப் பயிற்சியை 17 நாடுகளிலிருந்து வந்த சில பார்வையாளர்கள், ஜப்பானிய கடலோரக் காவற்படையின் பிரதிநிதிக் குழு மற்றும் தேசியக் கடல்வழி தேடுதல் மற்றும் மீட்புக்குழு மன்றத்தின் உறுப்பினர்கள் பார்வையிட்டனர்.
இந்தப் பயிற்சியின் முக்கிய நோக்கம் தேடுதல் மற்றும் மீட்பு, மாசுப் பிரச்சினைக்கான தயார்நிலை மற்றும் கடலோர சட்ட அமலாக்கம் ஆகிய விஷயங்களில் செயல்பாட்டு அளவிலான ஒத்துழைப்பையும், திறன் மேம்பாட்டையும் அதிகப்படுத்தலேயாகும்.