TNPSC Thervupettagam

சார் தாம் நெடுஞ்சாலைத் திட்டம்

September 24 , 2017 2671 days 1044 0
  • தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (National Green Tribunal – NGT) சார் தம் நெடுஞ்சாலைத் திட்டத்திற்கான முன்மொழிவுக்கு இசைவு தெரிவித்து உள்ளது.
  • கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதர்நாத் மற்றும் பத்ரிநாத் எனும் புனித யாத்திரை நகரங்களுக்கு இடையேயான சாலைவழித் தொடர்பை மேம்படுத்துவதற்காக உண்டாக்கப்பட்ட நெடுஞ்சாலை மேம்பாட்டு திட்டமே சார் தாம்.
  • யாத்ரிகர்கள் மற்றும் இராணுவ பாதுகாப்பு படைகளுக்கு அனைத்து காலநிலைகளுக்கு ஏற்ற சாலைத் தொடர்பு வசதிகளை தரக்கூடிய நிலச்சரிவு தணிப்பு வசதிகள் மற்றும் பிற சாலை பாதுகாப்பு வசதிகள்  தரும் கூறுகளோடு, நடைபாதைகளோடு கூடிய சாலைகள் அமைத்தலே இத்திட்டத்தின் குறிக்கோளாகும்.
குறிப்பு
  • பொதுவாக உத்ரகாண்டிலுள்ள இந்த நான்கு பண்டைய யாத்திரை மையங்களும் சோட்டா சார் தாம் (Chota Char Dham) என அழைக்கப்படும்.
  • புரி, இராமேஸ்வரம், துவார்கா, பத்ரிநாத் ஆகிய நவீனகால யாத்திரை மையங்களின் சாலை சுற்றமைப்பே சார் தாம் என்றழைக்கபடும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்