1985 ஆம் ஆண்டு டிசம்பர் 08 ஆம் தேதியன்று டாக்காவில் நடைபெற்ற முதல் சார்க் (SAARC) உச்சி மாநாட்டில் கையெழுத்தான சார்க் சாசனம் ஆனது சார்க் அமைப்பு நிறுவப் பட்டதைக் குறிக்கிறது.
அன்றிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 08 ஆம் தேதியன்று சார்க் சாசன தினமாக அனுசரிக்கப்படுகிறது.
சார்க் அமைப்பு பற்றிய விழிப்புணர்வை ஊக்குவித்தல் மற்றும் அந்தப் பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் தெற்காசிய நாடுகளின் அடையாளம் மற்றும் ஒற்றுமையை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
சார்க் சாசனத்தில் வங்காளதேசம், பூடான், இந்தியா, மாலத்தீவு, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய ஏழு தெற்காசிய நாடுகளின் தலைவர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.