TNPSC Thervupettagam

சாலை விபத்துகளின் போக்குகள்

February 15 , 2024 284 days 281 0
  • 2022 ஆம் ஆண்டில் 64,105 விபத்துகள் பதிவானதுடன் தேசிய நெடுஞ்சாலைகளின் வலையமைப்பில் அதிக எண்ணிக்கையில் சாலை விபத்துகள் பதிவான மாநிலமாக தமிழ்நாடு உருவெடுத்துள்ளது.
  • தமிழகத்தில் சாலை விபத்துக்களால் 17,884 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • 2022 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் மொத்தம் 4,61,312 சாலை விபத்துகள் பதிவாகி உள்ளன.
  • இந்த சாலை விபத்துகளால் 1,68,491 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதோடு, மேலும் 4,43,366 நபர்கள் காயமடைந்துள்ளனர்.
  • கடந்த ஆண்டு நாட்டில் நடந்த விபத்துகளில் 13.9% ஆனது தமிழ்நாட்டில் 64,105 விபத்துக்கள் பதிவாகியுள்ளன.
  • அதைத் தொடர்ந்து 54,432 விபத்துகளுடன் மத்தியப் பிரதேசம் இடம் பெற்றுள்ளது.
  • 2022 ஆம் ஆண்டில், தமிழ்நாடு மாநிலம் ஆனது தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக தனது முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டது.
  • தேசிய நெடுஞ்சாலைகளில் 2018 ஆம் ஆண்டில் 22,961 விபத்துகளும், 2019 ஆம் ஆண்டில் 21,489 விபத்துகளும், 2020 ஆம் ஆண்டில் 18,372 விபத்துகளும், 2021 ஆம் ஆண்டில் 16,869 விபத்துகளும், 2022 ஆம் ஆண்டில் 18,972 விபத்துகளும் பதிவாகி உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்