2022 ஆம் ஆண்டில் 64,105 விபத்துகள் பதிவானதுடன் தேசிய நெடுஞ்சாலைகளின் வலையமைப்பில் அதிக எண்ணிக்கையில் சாலை விபத்துகள் பதிவான மாநிலமாக தமிழ்நாடு உருவெடுத்துள்ளது.
தமிழகத்தில் சாலை விபத்துக்களால் 17,884 பேர் உயிரிழந்துள்ளனர்.
2022 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் மொத்தம் 4,61,312 சாலை விபத்துகள் பதிவாகி உள்ளன.
இந்த சாலை விபத்துகளால் 1,68,491 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதோடு, மேலும் 4,43,366 நபர்கள் காயமடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டு நாட்டில் நடந்த விபத்துகளில் 13.9% ஆனது தமிழ்நாட்டில் 64,105 விபத்துக்கள் பதிவாகியுள்ளன.
அதைத் தொடர்ந்து 54,432 விபத்துகளுடன் மத்தியப் பிரதேசம் இடம் பெற்றுள்ளது.
2022 ஆம் ஆண்டில், தமிழ்நாடு மாநிலம் ஆனது தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக தனது முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டது.
தேசிய நெடுஞ்சாலைகளில் 2018 ஆம் ஆண்டில் 22,961 விபத்துகளும், 2019 ஆம் ஆண்டில் 21,489 விபத்துகளும், 2020 ஆம் ஆண்டில் 18,372 விபத்துகளும், 2021 ஆம் ஆண்டில் 16,869 விபத்துகளும், 2022 ஆம் ஆண்டில் 18,972 விபத்துகளும் பதிவாகி உள்ளன.