TNPSC Thervupettagam

சாலை விபத்துக்களை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடும் வழக்குகளுக்கு BNS

January 7 , 2024 195 days 192 0
  • புதிய பாரதிய நியாய சன்ஹிதா (BNS) – பாரதிய நீதி விதித் தொகுப்பானது சாலை விபத்துக்களை ஏற்படுத்தி விட்டு அவர்கள்தப்பி ஓடும் வழக்குகளில், மரணத்தை ஏற்படுத்தியதற்காக கடுமையான தண்டனையை விதிக்கப் பரிந்துரைக்கிறது.
  • இது சாலை விபத்துக்களை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடும் வழக்குகளை, அவசரம் அல்லது அலட்சியம் காரணமாக மரணத்தை ஏற்படுத்தும் மோசமான குற்ற வடிவமாக கருதுகிறது.
  • பாரதிய நீதி விதித் தொகுப்பின் 106வது பிரிவு ஆனது இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 304A என்ற பிரிவினை மாற்ற உள்ளது.
  • இது மரணம் விளைவிக்கும் குற்றத்திற்குச் சமம் இல்லாத, அவசர மற்றும் கவனக் குறைவான செயலால் மரணத்திற்கு இட்டுச் செல்லக் காரணமானவர்களை தண்டித்தது.
  • தற்போதுள்ள சட்டப் பிரிவு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையை வழங்குகிறது.
  • முதலாவதாக, 106வது சட்டப்பிரிவு ஆனது, அவசரமான அல்லது அலட்சியமான செயல்களால் மரணத்தை ஏற்படுத்தியதற்காக அபராதத்தோடு, ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கிறது;
  • இரண்டாவதாக, மருத்துவ நடைமுறையின் போது மரணம் ஏற்பட்டால், பதிவு செய்யப் பட்ட மருத்துவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்ற மருத்துவர்களுக்கான தண்டனையைக் குறைக்கிறது.
  • அதிவிரைவாகவும், அலட்சியமாகவும் வாகனம் ஓட்டிய நபர், “சம்பவம் நடந்தவுடன் காவல் துறை அதிகாரியிடமோ அல்லது நீதிபதியிடமோ புகாரளிக்காமல் தப்பிச் சென்றால்” 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்