TNPSC Thervupettagam

சாலைப் பாதுகாப்பு குறித்த மூன்றாவது உலகளாவிய மாநாடு

February 20 , 2020 1612 days 673 0
  • 2030ஆம் ஆண்டிற்குள் உலகளாவிய இலக்குகளை அடைவதற்கான சாலைப் பாதுகாப்பு குறித்த மூன்றாவது உலகளாவிய உயர் மட்ட மாநாடானது ஸ்வீடன் நாட்டில் உள்ள ஸ்டாக்ஹோமில் நடைபெற்றது.
  • இந்த மாநாட்டில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் இந்தியாவைப் பிரதிநிதித்துவப் படுத்தினார்.
  • உலக சுகாதார அமைப்பானது உலக வங்கி மற்றும் 80க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அமைச்சர் தலைமையிலான பிரதிநிதிகளுடன் இணைந்து இதை ஏற்பாடு செய்தது.
  • உலகளாவிய நிகழ்ச்சி நிரலில் சாலைப் பாதுகாப்பைக் கொண்டு வருவதே இந்த மாநாட்டின் நோக்கமாகும்.
  • இந்த மாநாட்டின் கருப்பொருள் “2030 ஆம் ஆண்டிற்குள் உலகளாவிய இலக்குகளை அடைதல் என்பதாகும்.
  • பிரேசிலியா பிரகடனமானது 2015 ஆம் ஆண்டில் பிரேசிலில் நடைபெற்ற சாலைப் பாதுகாப்புக் குறித்த இரண்டாவது உலகளாவிய உயர் மட்ட மாநாட்டில் கையெழுத்தானது.
  • ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது சாலைப் பாதுகாப்பு நடவடிக்கைகளின் பத்தாண்டு காலமாக 2010-2020 ஆம் பத்தாண்டை அறிவித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்