சாலைப் போக்குவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உலக நினைவு தினம் – நவம்பர் 21
November 24 , 2023 368 days 253 0
சாலைப் போக்குவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உலக நினைவு தினம் ஆனது 1993 ஆண்டில் ரோடு பீஸ் என்ற அமைப்பினால் தொடங்கப்பட்டது.
2005 ஆம் ஆண்டில், ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதத்தின் ஒவ்வொரு மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையும் இந்த உலகளாவியத் தினம் அனுசரிக்கப்படுவதற்கு ஐக்கிய நாடுகள் சபை ஒப்புதல் அளித்தது.
இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, ‘நினைவில் கொள்தல். ஒத்துழைப்பு. செயல்படுதல்’ என்பதாகும்.
உலகிலுள்ள சாலைகளில் சுமார் ஒவ்வொரு 24 வினாடிகளுக்கும் ஒருவர் விபத்தினால் இறக்கிறார் என்ற நிலையில், இதில் 90% இறப்புகள் குறைவான மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் நடைபெறுகின்றன.
இந்தியாவில் 2022 ஆம் ஆண்டில் சாலை விபத்துக்களால் சுமார் 1.68 லட்சம் பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.