TNPSC Thervupettagam

சாலைப் போக்குவரத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உலக நினைவு தினம் - நவம்பர் 20

November 24 , 2022 639 days 249 0
  • இது ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையன்று (இந்த ஆண்டு நவம்பர் 20 அன்று) அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த உலகளாவியத் தினமானது சாலைப் போக்குவரத்து விபத்துக்களால் பாதிக்கப் பட்டவர்கள், இறந்தவர்கள் அல்லது பலத்த காயம் அடைந்தவர்களை நினைவு கூர்வதற்கான ஒரு தினமாகும்.
  • 2022 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "நீதி" என்பதாகும்.
  • உலக வாகன எண்ணிக்கையின் சுமார் 1 சதவீத வாகனங்களானது இந்தியாவில் பயன்படுத்தப் படுகிறது.
  • இருப்பினும், 2020 ஆம் ஆண்டில் பதிவான உலக சாலை விபத்துக்களில் 6 சதவீதம் ஆனது இந்தியாவில் தான் நிகழ்ந்துள்ளன.
  • சாலை அமைதி அமைப்பு ஆனது 1993 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்தினால் பாதிக்கப் பட்டோருக்கான உலக நினைவு தினத்தைத் தொடங்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்