TNPSC Thervupettagam

சாலைப் போக்குவரத்து நெரிசலால் பலியானோருக்கான உலக நினைவு நாள் - நவம்பர் 15

November 15 , 2020 1385 days 388 0
  • அக்டோபர் 26, 2005 அன்று, ஐக்கிய நாடுகள் சபையானது இந்த தினத்தை ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமையன்று ஒரு உலகளாவிய நாளாக கடைபிடிக்குமாறு வேண்டி அங்கீகரித்துள்ளது.
  • இது 1993 ஆம் ஆண்டில் பிரிட்டனில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டோருக்குத் தொண்டு செய்யும் நிறுவனமான ரோட் பீஸ் (Road Peace) என்ற ஒரு நிறுவனத்தால் தொடங்கப் பட்டது.
  • சாலை விபத்துக்களில் அதிக எண்ணிக்கையில் உயிர்களை இழப்பதில் சீனாவுக்கு அடுத்தபடியான நாடு இந்தியாவாகும்.
  • இந்தியாவில், விபத்தில் பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவுபவர்களுக்குச் சட்டப் பாதுகாப்பு வழங்கிட வேண்டி ‘இடர்பாட்டில் இருப்பவர்களுக்கு உதவி செய்யும் நல்லவர்’ என்ற ஒரு சட்டம் இயற்றப் பட்டுள்ளது.
  • இந்தச் சட்டம் ‘மோட்டார் வாகன சட்டம் 2019’ என்ற சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
  • சென்னையை மையமாகக் கொண்ட தோழன் என்ற ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தால் மார்ச் 30 ஆம் தேதியானது (2020) ‘இடர்பாட்டில் இருப்பவர்களுக்கு உதவி செய்யும் நல்லவர்’  என்ற ஒரு சட்ட நாளாகக் கொண்டாடப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்