அமெரிக்க அதிபர் வேட்பாளர்களின் தகவல் தொடர்புச் சாதனங்களை சீன நாட்டின் கணினி ஊடுருவிகள் (ஹேக்கர்கள்) குறி வைத்துள்ளனர்.
இந்த அதிநவீன ஊடுருவல் முயற்சியானது 'சால்ட் டைபூன்' எனப்படும் சீன இணைய உளவுக் குழுவால் திட்டமிடப் பட்டதாகக் கூறப்படுகிறது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணைய வெளிப் பாதுகாப்புக் குழுவால் உருவாக்கப் பட்ட சால்ட் டைபூன் என்ற பெயரானது, சீன அரசின் நிதியுதவியினைப் பெறும் சீன கணினி ஊடுருவல் குழுவாகும்.